என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விஜய் வசந்த்
  X
  விஜய் வசந்த்

  தன்னலமற்ற சேவையை நன்றியுடன் போற்றுகிறோம்... விஜய் வசந்த் செவிலியர் தின வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், செவிலியர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  கன்னியாகுமரி:

  செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், செவிலியர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  “அன்புடனும், பரிவுடனும் தன்னலமற்ற சேவை புரியும் செவிலியர்கள் அனைவரது அர்ப்பணிப்பை நன்றியுடன் போற்றுகிறோம். செவிலியர் தின வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார் விஜய் வசந்த்.
  Next Story
  ×