என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
  X
  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

  சாலையோர கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாலையோர கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  சேலம்:

  சேலம் கோட்டை ஹபீப் தெருவில் ஏராளமான பழைய புத்தகக் கடைகள் மற்றும் துணி கடைகள் செயல்பட்டு வந்தன.இதற்கிடையே அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் சாலையோர கடைகளை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் இடையே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

  இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களிடம் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×