என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  லாரி மோதியதில் சேதம் அடைந்த மொபட்
  X
  லாரி மோதியதில் சேதம் அடைந்த மொபட்

  நெல்லையில் மொபட் மீது லாரி மோதியதில் தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை ராமையன்பட்டி அலங்கார செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால் லாரி மோதி பலியானார்.
  நெல்லை:

  நெல்லை ராமையன்பட்டி அலங்கார செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). கட்டிட தொழிலாளி.

  இவர் இன்று அதிகாலை பணி முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே வந்த போது எதிரே சுரண்டையில் இருந்து பால் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது.

  இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விபத்து குறித்து பால் லாரி ஓட்டி வந்த சுரண்டை மரியதாய்புரம் வடக்கு தெருைவ சேர்ந்த மரியஜோசப்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×