என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் அய்யா வைகுண்டர்
  X
  அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் அய்யா வைகுண்டர்

  வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் அய்யாவைகுண்டர் கண்ணர்பதி திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் அய்யாவைகுண்டர் கண்ணர்பதியில் திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை மாலை திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.
  வள்ளியூர்:

  வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதியில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

  விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு தரும காரியம் நடைபெறுகிறது.

  8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  இதில் சிறப்பு விருந்தினராக  நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.

  10-ம் திருநாளான 15-ந்தேதி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு அய்யாவின் தலைமை பதியில் இருந்து வெள்ளை குதிரையில் திருபதம் எடுத்து வருதல் நடைபெறுகிறது.

  மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு அய்யாவுக்கு உம்பான் நியமித்தல் நடைபெறுகிறது. 
  Next Story
  ×