என் மலர்
உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே தூக்குபோட்டு ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மொரட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் மகன் சுரேஷ்குமார் (வயது 23) இவர் அதே பகுதியில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின்னர் காலையில் முருகவேல் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது சுரேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரின் தற்கொலைக்கு காதல் தோல்வியா?பின்னர் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.