search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தென்மேற்கு பருவமழை காலங்களில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை

    தென்மேற்கு பருவமழை காலங்களில் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை காலங்களில் சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.  
     
    இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாய்கள், நீர்வழித்தடங்களை தூர்வாருதல், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளிலிருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரிநீர் நீர் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

    மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்வதற்கு தேவையான ஜே.சி.பி. இயந்திரம், குப்பேட்டா, இட்டாச்சி, டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், கழிவுநீர் வெளியேற்றும் வாகனங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கூடுதலாக வாகனங்கள் தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் போதுமான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கும், சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை சரிசெய்து சாக்கடை கழிவுநீர் தேங்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைகாலங்களில் மழைநீர் எங்கும் தேங்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின்மாற்றிகளை மாற்றி அமைத்தும், தாழ்வான நிலையில் செல்லும் மின்சார கம்பிகளை சரிசெய்திடவும், மழை பெய்யும் காலங்களில் மின்சார பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என மேயர் கேட்டு கொண்டார்.

    இக்கூட்டத்தில் துணைமேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் எஸ்.டி.கலையமுதன், உமாராணி,  தனசேகர், அசோகன், நிலைக்குழுத்தலைவர்கள் ஜெயகுமார், குமரவேல், சாந்தமூர்த்தி, மஞ்சுளா,  சரவணன், முருகன், நியமனக்குழுத் உறுப்பினர் தமிழரசன்,  கண்காணிப்பு பொறியாளர்  கோபாலகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர் சந்தோஷ் குமார், வட்டாட்சியர் செம்மலை,  மாநகர பொறியாளர்   ரவி, மாநகர நல அலுவலர் யோகானந் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×