search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த மரங்களை படத்தில் காணலாம்.
    X
    சேதமடைந்த மரங்களை படத்தில் காணலாம்.

    செங்கோட்டையில் தோட்டத்தில் புகுந்த யானைகளால் மரங்கள் சேதம்

    செங்கோட்டையில் உள்ள தோட்டத்தில் யானைகள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது.
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து குண்டாறு அணைப்பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டை அணை உள்ளது. இந்த அணையின் அருகே சீனிமாந்தோப்பு உள்ளது.

    இதில் விஜய பாரதன் என்பவருக்கு சொந்தமான  தோட்டத்தில் திடீரென யானை கூட்டம் புகுந்தது. அவை அங்கிருந்த சுமார் 20 தென்னை மரங்களை சேதப்படுத்தியும், வேரோடு சாய்த்தும் அட்டகாசம் செய்தது.

    மேலும் சீசனையொட்டி மரங்களில் காய்த்திருந்த மாங்காய்களை சேதப்படுத்தியும், மா மாரத்தின் கிளைகளை ஒடித்தும், பலா பழங்களை முழுவதுமாக சேதப்படுத்தவும் செய்தன.

    அங்கிருந்த வாழை மரங்களையும் பிடுங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கால கட்டத்தில்  தோட்டங்களுக்குள் புகும் யானை கூட்டத்தால் பயிர்கள், மரங்கள் சேதமடைகிறது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    அணைப்பகுதியிலும், அணைக்கு மேலே யானைகள் தண்ணீர் அருந்தும் இடங்கள் பலவும் அடைக்கப்பட்டுள்ளதால் தான் யானைக்கூட்டங்கள் கோடை காலங்களில் தண்ணீருக்காக தோட்ட–ங்களுக்குள் வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
    Next Story
    ×