search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெல்ஜியம் மொரினோ நாய்க்குட்டிகள்
    X
    பெல்ஜியம் மொரினோ நாய்க்குட்டிகள்

    சென்னை விமான நிலைய பாதுகாப்பில் பெல்ஜியம் நாய்கள்- முதல் முறையாக அறிமுகம்

    சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிற்படையினா், பிறந்து 3 மாதமே ஆன பெல்ஜிய மாலினோயிஸ் வகையை சேர்ந்த 2 நாய் குட்டிகளை சேர்த்து உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற் படை போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய தொழிற்படையினர் பயணிகளின் உடமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிற்படையினா், பிறந்து 3 மாதமே ஆன பெல்ஜிய மாலினோயிஸ் வகையை சேர்ந்த 2 நாய் குட்டிகளை சேர்த்து உள்ளனர். இந்த நாய் குட்டிகள் மோப்ப சோதனைக்காக 6 மாத பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள பயிற்சி கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது.

    இதனால் நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டி, பயிற்சிக்கு அனுப்பும் நிகழ்ச்சி சென்னை விமான நிலையத்தில் நடந்தது. மத்திய தொழிற்பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்றது. 2 நாய் குட்டிகளுக்கும் வீரா, பைரவா என்று பெயா் சூட்டப்பட்டு உள்ளது. நாய் குட்டிகளுக்கு மாலை அணிவித்து பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் கூறுகையில், சென்னை விமான நிலைய மோப்ப நாய்கள் பிரிவுக்கு பிறந்து 86 நாளான 2 பெல்ஜிய மாலினோயிஸ் நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவை பெங்களூருவில் உள்ள மத்திய தொழிற்படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்திற்கு இந்த மாதம் 14ந் தேதி அனுப்பி வைக்கப்படும். 6 மாத பயிற்சி முடிந்ததும் விமான நிலைய பாதுகாப்பு பணியில் சேர்த்து கொள்ளப்படும். இதுவரை பயிற்சி பெற்ற 7 நாய்கள் உள்ளன. பெல்ஜிய மாலினோயிஸ் நாய்கள் உலகில் பல நாடுகளில் பாதுகாப்பு பணியில் உள்ளன. இந்தியாவில் சென்னை விமான நிலையத்தில் பெல்ஜிய மாலினோயிஸ் நாய்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×