என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காரில் தென்னந்தட்டி மேற்கூரையுடன் செல்லும் டிரைவர்.
  X
  காரில் தென்னந்தட்டி மேற்கூரையுடன் செல்லும் டிரைவர்.

  கல்லிடைக்குறிச்சியில் காரின் மேல் தென்னந்தட்டி கூரையுடன் உலா வரும் டிரைவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லிடைக்குறிச்சியில் கோடை வெயிலுக்கு இதமாக காரில் தென்னந்தட்டி மேற்கூரையுடன் டிரைவர் உலா வருகிறார்.
  கல்லிடைக்குறிச்சி:

  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனை தெருவில் வசிப்பவர் பிரம்மநாயகம் (வயது 78). இவரது மனைவி பார்வதி.

  இவர் நெடுஞ்சாலை துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு‌ பெற்றவர்.

  இவர் தனக்கு சொந்தமான காரின் மேல் கூரையின் மீது தென்னம் தட்டி வைத்து தனக்கும் தன் மனைவிக்கும் கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க இயற்கை முறையில் நிழல் அமைத்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சாலையில் உலா வருகிறார்.

  இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் தன்னை பொறுத்தவரை இயற்கை முறையில் எனக்கும் என் மனைவிக்கும் குளிர்ச்சி தருகிறது என கூறுகிறார்.
  Next Story
  ×