search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அமைதியான மாநிலம் என்று தமிழகத்துக்கு நற்பெயர் கிடைத்துள்ளது- மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

    இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதிச் சண்டைகள் இல்லை; மத மோதல்கள் எழவில்லை; துப்பாக்கிச் சூடுகள் இல்லை; அராஜகங்கள் இல்லை; இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. இதுதான் உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கிக் கொடுத்தது காவல்துறை.

    இன்றைக்குத் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான், வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

    இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடு; பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் ஒரு கை, நிர்வாகம் என்றால்; இன்னொரு கை, காவல்துறை. இந்த இரண்டும் முறையாக சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாகப் பெயர் பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×