search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட கொலை, கொள்ளை குறைந்துள்ளன- மு.க.ஸ்டாலின் பேச்சு

    அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அது பெருமளவு குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரை நடைபெற்ற கொலைகள் 1,695. கடந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்துள்ள கொலைகள் 1,558. கொள்ளை அ.தி.மு.க. ஆட்சியில் 146. தற்போது அது 103 ஆகக் குறைந்துள்ளது. கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அ.தி.மு.க. ஆட்சியில் மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரை 30 கூலிப்படைக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த ஆட்சியில் அது 18ஆகக் குறைக்கப்பட்டு கூலிப்படைகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் 16 போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் அந்த நிலை ஏற்படவில்லை. எங்கும் எந்தச் சூழலிலும் துப்பாக்கிச்சூடு என்பது ஏற்படவே இல்லை.

    அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றால், இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம் என்றார்.
    Next Story
    ×