என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
  X
  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

  தூத்துக்குடியில் தே.மு.தி.க. சார்பில் கிரிக்கெட் போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் தே.மு.தி.க. சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் ஆலோசனையின்பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. மற்றும் பிரையண்ட் நகர் ராமர் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது.

  கிரிக்கெட் போட்டிக்கு மாவட்ட துணைச்செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மொத்தம் 32அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் கோப்பையை மாவட்ட துணை செயலாளர் வி.வி.வி.ஏ.ராமகிருஷ்ணன் வழங்கினார்.

  2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.7ஆயிரம் மற்றும் கோப்பையை தொழில்அதிபர் பாஸ்கரன் வழங்கினார். 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.5ஆயிரம் மற்றும் கோப்பையை ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் மாரி வழங்கினார். மேன் ஆப் தி மேட்ச் வென்ற அணிக்கு மாவட்ட மீனவரணி செயலாளர் முனியசாமி பரிசு வழங்கினார்.

  இதில் நிர்வாகிகள் ராஜா முஹம்மது, சின்னதுரை, மீளவிட்டான் பகுதி துணை செயலாளர் சின்னதுரை மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×