என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண்களை படத்தில் காணலாம்.
  X
  பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண்களை படத்தில் காணலாம்.

  பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
  கடையம்:

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது மேட்டூர் .இந்த ஊரில் பீடி சுற்றும் தொழிலே பிரதானமான தொழிலாக உள்ளது.இந்த நிலையில் இங்கு உள்ள ஒரு பீடிக்கடையில் கடந்த இரண்டு வருடங்களாக போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

  மேலும் வாரம் வாரம் பீடி சுற்றும் சம்பளத்தை ஒழுங்காக வழங்கவில்லை எனவும் கூறி, நல்ல பீடி இலை தூள் தருவதில்லை அதனால் பீடி சுற்றும் தொழில் பாதித்து முடங்குகிறது என கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடிக்கடையை நேற்று முற்றுகையிட்டனர்.  

  இதையடுத்து கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்து விரைவில் பீடி சம்பளம் வழங்க கடைக்காரர்கள் உறுதி அளித்தனர். இைதத் தொடர்ந்து பீடி சுற்றும் பெண்கள் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×