search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழுநோயாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.
    X
    தொழுநோயாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்ட காட்சி.

    கடையம் அருகே தோல் நோய் இலவச சிகிச்சை முகாம்

    கடையம் அருகே தர்மபுரம் மடம் ஊராட்சியில் தோல் நோய் இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையம் யூனியன் தர்மபுரம் மடம் ஊராட்சியில் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகம் சார்பாக தோல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர்ரூஹான் ஜன்னத் தலைமையிலும் தோல் நோய் சிகிச்சை நிபுணர், இயக்குநர், மருத்துவர் அலர் சாந்தி முன்னிலையிலும்நடைபெற்றது.

    முகாமில் தொழு நோய் ஆரம்ப அறிகுறி, சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர் அலர் சாந்தி ஆலோசனை கூறினார்.தொழுநோய் ஊன தடுப்பு முறைகள் பற்றி மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை கூறினார்.

    இதில் துணைத்தலைவர் அனுசியா, கடையம் யூனியன் 14-ம் வார்டு கவுன்சிலர் ஜஹாங்கிர், வார்டு உறுப்பினர் பாஸ்கர், மருத்துவ மல்லா மேற்பார்வையாளர்கள் செல்லத்துரை, ஹரிசங்கர், சிங்கராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். தொழுநோயாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தோல் நோய்க்கான சிகிச்சை பெற்றனர்.
    Next Story
    ×