என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கடையம் அருகே மின்வேலிகளை சேதப்படுத்திய 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையம் அருகே மின்வேலிகளை சேதப்படுத்திய 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பபட்டது.
  கடையம்:

  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரக வன எல்கையில் வன உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்கு கோவிந்தப்பேரி பீட் மற்றும் கடையம் பீட்டில் சோலார் மின் வேலியில் 2 காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

  இந்த காமிரா பாக்ஸ்களை கடந்த 2-ந்தேதி மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது சம்பந்தமாக உதவி வனப்பாதுகாவலர் ராதை விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்காலிக வன ஊழியராக பணிபுரிந்து வந்த மேட்டூரை சேர்ந்த ஒருவர், வனப்பணியாளர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு பாதுகாக்கபட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து காமிராக்களை சேதப்படுத்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதற்கு கடையத்தை சேர்ந்த மற்றொரு தற்காலிக வனஊழியர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. அவர்களுக்கு துணை இயக்குனர் செண்பகப் பிரியா உத்தரவின்படி ரூ.1 லட்சம் இணக்க கட்டணமாக விதிக்கப்பட்டது.

  இதுபோன்ற வனக்குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×