search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    உடுமலையில் 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு கற்பித்தல் குறிப்பு மற்றும் பாடங்கள் கற்பிப்பு திட்டம் எழுதுதல் தொடர்பான ஆசிரியர்களுக்கான பணிமனை நடந்தது.
    உடுமலை:

    மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    அதன் ஒரு பகுதியாக உடுமலை திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 9 மற்றும் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான கற்பித்தல் குறிப்பு, பாடம் கற்பிப்பு திட்டம் எழுதுதல் பணிமனை நடத்தப்பட்டது. 

    பார்க் ரோடு நகராட்சிப்பள்ளியில் நடந்த பணிமனைக்கு பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். பின்கற்பித்தல் குறிப்பு எழுதுவதன் அவசியம் குறித்து பேசினார். கருத்தாளராக விரிவுரையாளர் சரவணகுமார் செயல்பட்டார்.

    தவிர கற்பித்தல் குறிப்பு, பாடம் கற்பிப்பு திட்டம், எழுதுதலின் படிநிலைகள், கற்பித்தல் நோக்கங்கள், ஆசிரியர் மாணவர் செயல்பாடுகளை வடிவமைத்தல், மதிப்பீட்டு வினாக்களை வடிவமைத்தல், வகை தொகை அடிப்படையில் வினாக்களை உருவாக்குதல், வினாக்கள் வடிவமைப்பதில் இடம்பெற வேண்டிய முக்கியக்கருத்துக்கள், கற்பித்தல் குறிப்பு சார்ந்த அறிவுரைகளை ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

    இதில் ஆசிரியர்கள் சின்னராசு, ஜெயந்தி, ரேவதி, ஈஸ்வரி, செலின்ராணி உட்பட பலர் பங்கேற்றனர். பணிமனையில் தயாரிக்கும் கற்பித்தல் குறிப்புகள், பாடம் கற்பிப்பு திட்டங்கள் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், உடுமலை கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்புக்கூட்டம பார்க் ரோடு, நகராட்சிப் பள்ளியில் நடந்தது. 

    உடுமலை கல்வி மாவட்ட கிளையின் தலைவர் சீனிவாசராகவன் தலைமை, செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். 

    முன்னதாக, உடுமலை வட்டாரச்செயலாளர் ஈஸ்வரன், இன்றைய பள்ளிகளில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார். தவிர, பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும், தற்போதைய அரசுப்பள்ளிகளின் நிலை, மாணவர்கள் சிலரின் தவறான பாதை, ஆசிரியர்களின் கடமை, ஆசிரியர்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர். 

    இதற்கான ஏற்பாடுகளை, உடுமலை வட்டார பொருளாளர் அய்யப்பன் செய்திருந்தார். உடுமலை வட்டாரத்தலைவர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
    Next Story
    ×