search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாப்சிலிப்ைப நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
    X
    டாப்சிலிப்ைப நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

    கோடையிலும் நிலவும் குளுமை- டாப்சிலிப்ைப நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

    பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது டாப்சிலிப்.
    ஆனைமலை:

    பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது டாப்சிலிப். இந்த பகுதிக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து இயற்கை சூழலை கண்டு கழிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

    இங்கு யானை சவாரி, யானைகள் வளர்ப்பு முகாம், வனப்பகுதிக்குள் நடைபயணம் என பல அம்சங்கள் நிறைந்துள்ளது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பள்ளிகள் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    தற்போது சமவெளி பகுதிகளில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் குளுமையான பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் டாப்சிலிப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்களாக டாப்சிலிப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் கடும் பனி மூட்டமும் நிலவி அந்த பகுதியே ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் டாப்சிலிப் வனப்பகுதி முழுவதுமே பச்சை பசேல் என பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது.

    தற்போது டாப்சிலிப் வன பகுதியில் மான்கள், காட்டு மாடுகள் வனத்தையொட்டிய சாலையோரங்களில் நின்று கூட்டம், கூட்டமாக மேய்ந்து வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் செல்போனில் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா பெறும் தொற்று காரணமாக டாப்சிலிப் பகுதியில் நிறுத்தப்பட்ட யானை சவாரி மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×