என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூட்டத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசிய காட்சி.
  X
  கூட்டத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசிய காட்சி.

  ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திசையன்விளையில் நடைபெற்றது.
  திசையன்விளை:

  ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளரும், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் திசையன்விளை வி.எஸ்.ஆர். மாலில் அமைந்துள்ள கெட்டிமேளம் மகாலில் நடைபெற்றது.

  கூட்டத்தில்  ராதாபுரம் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஸ்டன் வரவேற்று பேசினார். திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் தொகுப்புரை வழங்கினார். திசையன்விளை பேரூர் முன்னாள் செயலாளர் ஜெயராஜ் வாழ்த்தி பேசினார்.

  அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் சிறப்புரை வழங்கினார். அப்போது தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் முதலாம் ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

  மேலும்  2-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ராதாபுரம் கிழக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், கிளை செயலாளருமான அந்தோணி நன்றி கூறினார்.

  கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம்,அமைச்சியார், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜான்சன் ஜோசப்,மாவட்ட வழக்கறிஞர் அணி பொன்துரை,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ்,ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் வாழ வந்த கணபதி,அல்போன்ஸ்,கென்னடி,

  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜன்,அல்போன்ஸ்,முகமது சரிபு,செல்லகுட்டி,ரமேஷ், ஜேக்கப், பால்ராஜ், சொக்கலிங்கம், திராவிடமணி, வேலப்பன், மில்லர், பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு,முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்பு ராஜன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து கிளை  நிர்வாகிகள் மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×