என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  திருப்பூர் தொழில் அதிபரை தாக்கி பணம் பறிக்க முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரபாளையம் அருகே திருப்பூர் தொழில் அதிபரை தாக்கி பணம் பறிக்க முயற்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
  குமாரபாளையம்:

  திருப்பூர் அம்மா–பாளையத்தை சேர்ந்த தொழில் அதிபர் நாகராஜ். இவர்  கொல்கத்தா சென்றுவிட்டு காரில் ஊருக்கு சென்றார். 

  குமாரபாளையம் அருகே கல்லூரி பகுதியில் காரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.

  அப்போது  செடிகள் மறைவில் இருந்த 2 பேர் திடீரென நாகராஜை புதருக்குள் இழுத்து சென்றனர். அங்கு  மேலும்  2 பேர் சேர்ந்து, இருக்கும் பணத்தை எடு என்று கூறியுள்ளனர்.

  அதற்கு நாகராஜ் மறுக்கவே ஆத்திரம் அடைந்த 4 பேரும்  அவரை காலில் இரும்பு ஆயுதம் கொண்டு தாக்கினர். பின்பு நாகராஜ் அங்கிருந்து தப்பினார்.

  அவர் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  இது குறித்து குமாரபாளையம், சங்ககிரி போலீசாரும் விசாரணை செய்து வருகிறார்கள். 

  அந்த இடம் இருட்டாக இருப்பதால் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும், போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.  
  Next Story
  ×