என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  7.5 சதவீத இட ஒதுக்கீடு - பள்ளி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 13-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  திருப்பூர்:

  உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை, மீன் வளர்ப்பு, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லூரி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துகல்லூரிகளுக்கும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

  இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் பிளஸ்- 2 படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் விவரங்களை  எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். வருகிற 13-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 
  Next Story
  ×