என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாஜகவில் இணைந்த திமுக எம்.பி.சிவாவின் மகன் சூரியா
திமுக எம்.பி.யின் மகன் பாஜகவில் இணைந்தார்
பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் என்று திமுக எம்.பி.திருச்சி சிவாவின் மகன் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா நேற்று திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்த சூரியா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அவருக்கு சால்வை அணிவித்த அண்ணாமலை, கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரியா, உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் கட்சி பாஜக என்றும், பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம் எனவும் சூர்யா தெரிவித்தார்.
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த எம்.பி. டி.ஆர்.பாலு, திமுகவில் இருந்து விலகி பலர் மாற்று கட்சிகளில் இணைகிறார்கள் என்றும் அது போன்றுதான் இதுவும் என தெரிவித்துள்ளார்.
Next Story