search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    மீஞ்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு- புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வழங்க கோரிக்கை

    டிராக்டர் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர், மற்றும் குடிநீர் கேன்களை கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை நிலவுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீரும் உப்பு தண்மையுடன் மாறி விட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் டிராக்டர் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர், மற்றும் குடிநீர் கேன்களை கூடுதல் பணம் கொடுத்து வாங்கும் நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆணையர் செல்வராஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 18வது வார்டு அரவிந்த நகர் கலைஞர் நகர் பகுதியில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்றுவரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:

    மழைநீர் சாலையில் தேங்காதவாறு இருபுறமும் சாய்வாக அமைக்க வேண்டும். ஆர்.ஆர். பாளையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை முறையில் உரம் தயாரித்து விற்பனை செய்யவும் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கி கழிவுகள் சேராதவாறு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளை சுற்றி காணப்படும் புதர்களை அகற்ற வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி அறையை சுத்தம் செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அமர இருக்கைகள் அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அங்கிருந்த பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆணையர் செல்வராஜிடம் கூறும்போது, மீஞ்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புழல் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தஆய்வின் போது உதவி இயக்குனர் கண்ணன், செயல் அலுவலர் வெற்றி அரசு ,பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் ,மற்றும் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர், துரைவேல், பாண்டியன், ராஜன் உடன் இருந்தனர்.

    Next Story
    ×