
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கவரப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
தொட்டியத்தை அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி கவரப்பட்டியில் உள்ள எட்டுப்பட்டிக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலை கட்டுவதற்கு ஊர் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் முடிவு எடுத்து பாலாய அபிஷேகம் நடைபெற்றது.
கோயில் சுமார் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது
இந்தநிகழ்ச்சியில்நாகைநல்லூர், கரட்டுப்பட்டி, கருங்காடு, கவரப்பட்டி, பெரியநாச்சிபட்டி, ஆணைக்கல்பட்டி, கல்லூர்பட்டி, நானாபட்டி,
கொங்கம்பட்டி, மாமரத்துப்பட்டி, திம்மநாயக்கன்புத்தூர், கோழி சங்கம் பட்டிபுதூர், உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெண்கள் கலந்துகொண்டு கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை சிறப்பாக நடத்தினர்.