
நீர்நிலை, கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கெதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
முன்னதாக, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, சி.ஆர்.ராஜாமுகமது, பி.ராஜூ, கே.சக்திவேல். கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, ஒன்றியச்செயலாளர்கள் கரூர் எம்.ராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம் ஜி.தர்மலிங்கம், அரவக்குறிச்சி எம்.ஆறுமுகம்,
தோகைமலை ஏ.பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.வி.கணேசன், எஸ்.பி.ஜீவானந்தம், ஆர்.ஹோச்சுமின் உள்ளிட்ட நிர்வாகிகள், நீர்நிலை, கோயில் நிலங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்றனர்.
பல்வகை புறம்போக்குகளில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வீடற்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவேண்டும். வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம கணக்குகளில் ஏற்றிடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.