
நெல்லை மாநகராட்சி சாலைகளில் குப்பை போடுவதைத் தடுக்க, கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவுபடி மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் மற்றும் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா ஏற்பாட்டில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம்- அம்பை சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை கொட்டும் இடத்தில் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் ராமசாமி, நாகராஜன், பொதுசுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி, வார்டு கவுன்சிலர்கள் ரசூல்மைதீன், அலி ஷேக்மன்சூர், ஷபிஅமீர் பாத்து, ஆப்சா, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பரமன், குணா, கண்ணன், சின்னதுரை, மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை ஷாகுல் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.