search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் வீட்டு‌மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

    புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி

    தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, இண்டூர், காரிமங்கலம், உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்காண மக்கள், பல்லாண்டுகாலம் கோயில் நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். 

    எனவே கோவில் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும். நீர்நிலை புறம்போக்கு நிலங்களிலும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும், மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும் என 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு மாநிலக்குழுஉறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமைவகித்து பேசினார். மாவட்ட செயற்குழுஉறுப்பினர்கள் எம்.மாரிமுத்து எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, தருமபுரி நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி, என்.கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். 

    போராட்டத்தின் முடிவில் மனை பட்டா கேட்டு 750-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலத்தில் வழங்கினர்.
    Next Story
    ×