search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இரும்பிலான விளம்பர பதாகை.
    X
    சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இரும்பிலான விளம்பர பதாகை.

    சாலையோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்

    திருவையாறு கடைத்தெருவில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவையாறு:

    திருவையாறு கடைத்தெரு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையும் மாநில நெடுஞ்சாலையும் இணைந்து செல்லும் சாலையிலேயே அமைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு கடையின் முன்னாலும் சுமார் 5 அடி நீளம் வரையிலும் சாலையோரத்தை ஆக்கிரமித்து மேற்கூரையை நீட்டியும், விளம்பர இரும்பு ஸ்டாண்டுகளை நிறுத்தியும், கடைப் பொருட்களை அடுக்கி வைத்தும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் உருவாக்கப்படுகிறது. 

    சமீப காலமாக கடைகளின் ஆக்கிரமிப்புகளோடு வெளியூர் மின்விளக்கொளி விளம்பரப் பெட்டி தாங்கிய மின் ஒயர்கள் இணைக்கப்பட்ட. இரும்புக் கம்பங்கள் கடைத்தெரு முழுவதும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

    கோர்ட் உத்தரவு என்ற பெயரில் தியாகராஜர் ஆராதனை விழா மற்றும் சித்திரை சப்த ஸ்தான தேர்த்திருவிழாவை முன்னிட்டு மட்டுமே போலீசார், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை ஒருங்கிணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைத் தெரு ஆக்கிரமிப்புகளை தற்காலிகமாக மட்டுமே அகற்றுவதற்கு உத்திரவிடுவது வழக்கமாக உள்ளது. 

    ஆனால் வெளியூர் மின்னொளி விளம்பர இரும்புக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டியது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதே இல்லை என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருவையாறு கடைத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமி ப்புகளை நிரந்தரமாக அகற்றி, நெரிசல் இல்லாத போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×