search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஆன்லைன் மோசடி புகார்கள் குறைந்துள்ளது: போலீஸ் அதிகாரி தகவல்

    திருச்சி மாநகரில் ஆன்லைன் மோசடி புகார்கள் குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் முன்பெல்லாம் தினமும் 10-க்கும் மேற்பட்ட ஆன்லைன் பணமோசடி புகார்கள் வந்தன. இதனால் சைபர் கிரைம் போலீசுக்கு மிகுந்த  பணிச்சுமை ஏற்பட்டது.

    சில மோசடி பேர்வழிகள் வங்கியில் இருந்து பேசுகிறேன் என கணக்காளர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வார்கள். பின்னர் ஏ.டி.எம். கார்டு வந்திருக்கிறது. உங்கள் வங்கி கணக்கு எண், ரகசிய குறியீட்டு எண்ணை தாருங்கள் நைசாக கேட்டு வங்கி அவரின் பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

    இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் வங்கிகள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக குறைந்துள்ளதாக திருச்சி மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, எப்போதும் செல்போனில் வரும் குறுந்தகவல்களை பார்த்து கொண்டு இருக்க வேண்டும். பணம் போய்விட்டது என அறிந்த உடன் ஆன்லைன் மூலமே பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர முடியும். நேரில் வர வேண்டியதில்லை. டி.ஜி.பி. வரை புகார் விபரத்தை பார்க்க இயலும். இதனால்  நடவடிக்கை துரிதமாக நடைபெறும்.

    உடனே புகார் அளித்தால் மோசடி பேர்வழிகள் பணத்தை எடுப்பதற்கு முன்பு அவரின் வங்கி கணக்கை முடக்க முடியும்.  அவ்வப்போது காதல் பிரச்சினைகளும் வருகின்றன. சமூக வலைதளங்களில் தமக்கு பிடிக்காதவர்களை தவறாக சித்தரிக்க முடியும். ஆகவே பழகும்போதே பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    பணமோசடி புகார்களுக்கு மக்களின் பேராசையும் ஒரு காரணமாக இருக்கிறது. செல்போனுக்கு வரும் குறுந்தகவலில் உங்களுக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்திருக்கிறது. இதனை பெறுவதற்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் தனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்கிறார்கள்.

    இதனை நம்புபவர்கள் பணத்தை அனுப்பு ஏமாந்து நிற்கிறார்கள்.  எந்த போட்டியிலும் பங்கெடுக்காமல் லட்சக்கணக்கில் எப்படி பரிசு விழும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். யாரும் பணம் சும்மா தருவதில்லை என்பதை உணர வேண்டும் என்றார்.
    Next Story
    ×