
திருச்சி தில்லை நகரில் திரை நடன கலைஞர்கள் புதிய கிளை தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனரும், நடன இயக்குனருமான பிரதாப் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர செயலாளர் சிவ.வெங்கடேஷ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலர் வக்கீல் ரெங்கராஜன் சிறப்புரை ஆற்றினார்.
மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் இளங்குமரன் வாழ்த்துரை வழங்கினார். புதிய கிளையின் தலைவராக பிரதாப், செயலராக லாரன்ஸ், பொருளாளராக சந்துரு,
துணைத் தலைவர்களாக பிரின்சி, நிரஞ்சன், துணை செயலர்களாக விஜய், தினேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக தனம், சத்யா, திலீப், யுவராஜ், சூர்யா, சுல்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக இக்கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. முடிவில் செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.