
கரூரில் ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்கு மனு அளித்தும் கடந்த ஒராண்டாக நடவடிக்கை எடுக்காததைத் கண்டித்தும், ஓய்வூதியதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய சொல்வதால், ஆன்லைனில் மனு பதிவாகாததால், அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரச்சொல்லி அலைக்கழிக்க செய்வதாக புகார்கள் எழுந்தன.
இதனை கண்டித்தும் ஏஐடியுசி தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன் தலைமையில் கரூர் தொழிலாளர் நல வாரியம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள், கட்டிடத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.