
சென்னை:
ரெயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு 9, 10ந் தேதிகளில் ரெயில்வே தேர்வு வாரியம் நாடு முழுவதும் தேர்வு நடத்துகிறது.
உதவி ஸ்டேசன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் உள்ள 21 ஆர்.ஆர்.பி. மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை ஆர்.ஆர்.பி. 9ந்தேதி தேர்வு நடத்துகின்றது. ரெயில்வே தேர்வு 2 நாட்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த தேர்வுகளை எழுதுகிறார்கள். இதனால் தெற்கு ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, தென் மேற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகின்றன.
9, 10ந் தேதிகளில் தேர்வு எழுத செல்ல வசதியாக தேர்வு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தவிர 46 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம், எர்ணாகுளம்-மசூலிப்பட்டினம் இடையே தேர்வு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று பிற்பகல் 11 மணிக்கு மசூலிப்பட்டிணத்தில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல் எர்ணாகுளத்தில் இருந்து 9ந் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு மசூலிப்பட்டினத்திற்கு சென்றடைகிறது.
ஆந்திரா மாநிலம் அடிலா பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு இரவு 12.10 மணிக்கு வந்து சேருகிறது. சென்ட்ரலில் இருந்து 9ந் தேதி இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு அடிலாபாத்திற்கு மறுநாள் மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது.
திருநெல்வேலி-மைசூரு, திருநெல்வேலி சிறப்பு ரெயில் இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் மறுநாள் இரவு 10.35 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இதே போல் மங்களூர்-பெல்காவி இடையே இன்று ரெயில்வே தேர்வு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கொச்சுவேலிதாம்பரம் இடையே சிறப்பு ரெயிலும் விடப்பட்டுள்ளது.
கொச்சுவேலியில் இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரெயில் தாம்பரத்துக்கு நாளை மாலை 4.00 மணிக்கு வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு 10ந் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
இந்த ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடங்கி உள்ளனர். சிறப்பு ரெயில்கள் தவிர பிற ரெயில்களும் தற்போது கூட்டம் அதிகரித்து உள்ளது. அனைத்து ரெயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.