search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கைக்காய்
    X
    முருங்கைக்காய்

    முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

    நெல்லை மாவட்டம் ராதாபுரம், அணைக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் முருங்கை காய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம், அணைக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவைகளில் செடி முருங்கை, குரூஸ், அழகி ரகம் என பல்வேறு வகையான முருங்கைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் முருங்கை காய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயிலால் பூக்கள் உதிராமல் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இருந்தபோதிலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விலையில்லாமல் போனதால் இப்பகுதிகளில் உள்ள முருங்கைகாய்கள் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். கட்டாயம் உருவாகியுள்ளது. தற்போது முருங்கைக்காய் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 2 முதல் 3 ரூபாய் வரை விற்பனையாகிறது.
    Next Story
    ×