search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடி ஜீயருக்கு எதிராக தஞ்சை போலீசில் புகார் மனு அளித்த திராவிடர் கழக நிர்வாகிகள்.
    X
    மன்னார்குடி ஜீயருக்கு எதிராக தஞ்சை போலீசில் புகார் மனு அளித்த திராவிடர் கழக நிர்வாகிகள்.

    ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி போலீசில் கட்சி நிர்வாகிகள் புகார்

    வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தி.மு.க-தி.க.வினர் தஞ்சை, மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
    தஞ்சாவூர்:

    தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்வது கூடாது என தமிழக அரசு தடை அறிவித்தது.

    இந்நிலையில் தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோவில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிட சென்ற மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் திமுக அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என தெரிவித்திருந்தார். ஜீயரின் கருத்திற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அமர்சிங் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    மன்னார்குடி ராமானுஜ ஜீயர், திருவாவடுதுறை ஆதீனம் பல்லக்கு பவனிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை விமர்சித்து பேட்டி அளித்தார். வன்முறையை தூண்டும் விதமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியது சட்டப்படி குற்றமாகும்.

    பல்லக்கு பவனிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சாலையில் நடமாட விட மாட்டோம். அரசு செய்யும் அன்றாட பணிகளை முடக்குவோம் என்று பேசியுள்ளார்.  அவரது பேச்சுஅமைதிப் பூங்காவாகத்திகழும் தமிழகத்தில் மதக்கல வரத்தை தூண்டும்வகையில் உள்ளது. எனவே மன்னார்குடி ஜீயர் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதேபோல்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது. நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.
    Next Story
    ×