
நெல்லையை அடுத்த மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு பத்தினிப்பாறையை சேர்ந்தவர் பூத்துரை. விவசாயி.
இவருக்கு சக்தி பிரியா என்ற 3 மாத குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த குழந்தை திடீரென இறந்தது.
உடனே அவரது உறவினர்கள் முன்னிலையில் நேற்று அதிகாலை குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிராமத்தில் இருந்த சிலர் தெரிவித்தனர்.
இதை யடுத்து கிராம நிர்வாக அலுவலர் மதுபாலா மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.