search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சற்குரு சீனிவாச சித்தர்.
    X
    சற்குரு சீனிவாச சித்தர்.

    தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடையை வாபஸ் பெற வேண்டும்-தமிழக அரசுக்கு தூத்துக்குடி சித்தர் கோரிக்கை

    தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடையை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தூத்துக்குடி சித்தர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் என்ற ஆன்மிக நிகழ்ச்சியானது ‘‘குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் சேவை'' என்ற வாழ்வின் உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் பல நூறு வருடங்களாக பாரம்பரியமாகவே எவ்வித தடைகளும், தடங்கல்களும் இன்றி இறையருளால் இந்துக்கள் அனைவரும் மனம் மகிழும் வகையில் நடைபெற்று வருகிறது.

    இப்படிப்பட்டச்சூழலில், தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியம் முறையில் நடக்கவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து சிஷ்யர்களான மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகத்தினர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதற்கு தடை விதித்துள்ளார் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இந்நிலையில், கடவுளே இல்லை என்று கூறிவரும் சிலரின் பொறுப்பற்ற பேச்சைக் கேட்டு இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது இந்துக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.எனவே, அரசு இதனை உணர்ந்து, பழமையான பட்டினப்பிரவேசம் மீதான தடையை உடனடியாக வாபஸ் பெற்று அதற்கான அனுமதியை அளித்திடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×