
கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் அமைந்துள்ள யு.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவன தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அமுதவல்லி வரவேற்றார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்கணேஷ், மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள், தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளை வாழ்த்தி, ஆசி வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.