search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரா.காமராஜ் எம்.எல்.ஏ.
    X
    இரா.காமராஜ் எம்.எல்.ஏ.

    விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் - இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை

    வலங்கைமான் அருகே விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    திருவாரூர்:

    தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது நன்னிலம் எம்.எல்.ஏ இரா.காமராஜ் பேசியதாவது,

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் என்ற கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க, பொதுமக்கள் ஒன்றிணைந்து, ரூ.15 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் இடம் வாங்கி தந்துள்ளார்கள். கடந்த ஓராண்டாகியும் இதுவரை துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அந்த இடத்தில் விரைந்து துணை மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதுபோல் அப்பகுதியினர் மின்வாரியம் தொடர்பான தேவைகளுக்காக பக்கத்தில் உள்ள தஞ்சை மாவட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதனையும் அந்த பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

    இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் 216 இடங்களில் துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதில் 193 இடங்களில் மின் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்க ஒப்புதல் வழங்கப்படும். தொடங்கப்படும். அதன்படி அப்பகுதியில் இந்த ஆண்டு துணைமின் நிலையம் அமைக்கப்படும். மேலும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பக்கத்தில் உள்ள மாவட்டத்திற்கு சென்று தங்களுடைய மின்தேவை தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனையும் அந்தந்த மாவட்டங்களிலேயே செய்யக்கூடிய அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கூட்டத்தில் இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
    Next Story
    ×