search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பரமத்திவேலூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.84.97 லட்சத்துக்கு வர்த்தகம்

    பரமத்திவேலூர் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.84.97 லட்சத்துக்கு வர்த்தகம் விற்பனை ஆனது.
    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் வேளாண் பொருட்கள் ரூ.84லட்சத்து 97ஆயிரத்து 849க்கு விற்பனை ஆனது.

    வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. 

    இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை ய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 61.27 1/2குவிண்டால் எடை கொண்ட 19ஆயிரத்து 922தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.28.25ம், குறைந்த விலையாக ரூ.24.69ம், சராசரி விலையாக ரூ.26.55ம் என ஒரு லட்சத்து ரூ57ஆயிரத்து 698க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 197.56 குவிண்டால் எடை கொண்ட 429மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.89.65க்கும், குறைந்த விலையாக ரூ.87.61க்கும், சராசரி விலையாக ரூ.88.85-க்கும் மற்றும் இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.88.65-க்கும், குறைந்த விலையாக ரூ.74.59-க்கும், சராசரி விலையாக ரூ.86.65க்கும் என ரூ.17லட்சத்து 18ஆயிரத்து 988க்கு விற்பனை ஆனது.

    440.85குவிண்டால் எடை கொண்ட 589மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.119.49ம், குறைந்த விலையாக ரூ.104.19ம், சராசரி விலையாக ரூ.110.99ம் மற்றும் சிவப்பு எள்கி லோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.113.99ம், குறைந்த விலையாக ரூ.92.60ம், சராசரி விலையாக ரூ. 110.99ம் மற்றும் வெள்ளைஎள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.109.59க்கும், குறைந்த விலையாக ரூ 106.63க்கும், சராசரியாக ரூ 109.59க்கும் எனரூ.47லட்சத்து 73ஆயிரத்து 201க்கும் என ஏலம் போனது.

    அதேபோல் 289.64 குவிண்டால் எடை கொண்ட 860 மூட்டைநிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 67.61க்கும், குறைந்த விலையாக ரூ 58.20 க்கும் சராசரி விலையாக 64.61 க்கும் என ரூ18 லட்சத்து 47ஆயிரத்து 962 -க்கு ஏலம் போனது. 

    இந்த வாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை சாலைப்புதூரில் செயல்பட்டு வரும்அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.84லட்சத்து 97ஆயிரத்து 849க்கு விற்பனை ஆனது.
    Next Story
    ×