search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மடத்துக்குளம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் உள்ளே சென்று வர ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

    நீண்ட தூரம் செல்லும் (மப்சல்) பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி,இறக்கி சென்றன.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். உடுமலை, பொள்ளாச்சி, கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் நாகப்பட்டினம் வரை இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது. 

    இது தவிர மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் சென்று திரும்புகின்றன. இந்த நிலையில் நீண்ட தூரம் செல்லும் (மப்சல்) பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி,இறக்கி சென்றன.

    இதனால் பஸ் நிலையம் முன்பு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி  ஏற்பட்டு, விபத்துகளும் நடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் சென்று திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கலைவாணி பாலமுரளி கூறியதாவது:-

    மடத்துக்குளம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் சென்று திரும்ப வேண்டுமென ஒலிபெருக்கியால் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் பாதுகாப்பாக பஸ்சில் ஏறி, இறங்க முடிகிறது. விபத்துகள் குறைந்துள்ளன. இது தவிர போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்த கூடாது எனவும் சொல்லப்படுகிறது என்று தெரிவித்தார்.
    Next Story
    ×