search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத் தேர்வு
    X
    பொதுத் தேர்வு

    தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில் தொடங்கியது. இங்கு மொத்தம் 9.55 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.

    தமிழகத்தில் 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் தேர்தவில் முதல் 15 நிமிடம் மாணவர்கள் வினாத்தாளை படித்துபார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
    Next Story
    ×