
திருச்சி காட்டூர் காமராஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது50). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்ெறாரு மோட்டார் சைக்கிள், வடிவேல் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி வடிவேல் சாலையில்விழுந்தார். அவருக்கு தலை–யில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.