என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மார்த்தாண்டம் புதிய பஸ்நிலையத்தில் கருணாநிதி பெயரில் நுழைவு வாயில் அமைக்க அனுமதிக்க வேண்டும்
Byமாலை மலர்5 May 2022 2:57 PM IST
மார்த்தாண்டம் புதிய பஸ்நிலையத்தில் கருணாநிதி பெயரில் நுழைவு வாயில் அமைக்க அனுமதிக்க வேண்டும் என ஆய்வுப்பணியில் ஈடுபட்ட கலெக்டரிடம் குழித்துறை நகராட்சி தலைவர் கோரிக்கை
கன்னியாகுமரி:
குழித்துறை நகராட்சியில் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் திடீர் ஆய்வுப்பணி மேற்கொ ண்டார். நகராட்சியில் நடை பெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டார்.
பின்னர் மார்த்தாண்டம் சந்தை பகுதியில் உள்ள டெம்போ நிறுத்துமிடம், சேதமடைந்து காணப்படும் பழைய நூலகம் ஆகியவற்றை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். சந்தையில் புதிதாக கட்டப்பட இருக்கும் கட்டிடங்களுக்கான வசதிகள் குறித்து அவர் அதிகா ரிகளிடம் கேட்டறிந்தார்.
செயல்படாமல் கிடக்கும் மீன் பதப்படுத்தும் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்ட அவர், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
புதிய பஸ் நிலையம் பகுதியில் நுழைவு வாயில் அமைத்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட நகர்மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி அதற்கான அனுமதியை வழங்க குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைத்தம்பி கோரிக்கை விடுத்தார். அதன்படி அந்த இடத்தை கலெக்டர் அரவிந்த ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நகர்மன்ற ஆணையர் ராமதிலகம், துணைத் தலைவர் பிரவீன் ராஜா, கவுன்சிலர்கள் ரெத்னமணி, பிஜூ, அருள்ராஜ், ரீகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×