என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பிளஸ்- 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: தருமபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் 20,347 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்
Byமாலை மலர்5 May 2022 1:17 PM IST (Updated: 5 May 2022 1:17 PM IST)
தருமபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் 20,347 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில் 20,347 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்கள் அனைத்தும் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் தற்போது பொதுத் தேர்வுகள் இன்று( 5 -ந் தேதி) பிளஸ் 2 தேர்வு தொடங்கியது.
வரும் 28-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சேர்ந்த 20,347 மாணவ- மாணவிகள் 79 மையங்களில் தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்கள் 10,151 பேரும், மாணவிகள் 10,196 பேரும் தேர்வு எழுதினர். இதில் 102 அரசு பள்ளிகளை சேர்ந்த 13920 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
மாணவர்கள் 6515 பேரும், மாணவிகள் 7405 பேரும் தேர்வு எழுதினர்.
தலைமை கண்காணிப்பாளர் 79 பேர், கூடுதல் தலைமை கண்காணிப்பாளர் 4 பேர், தேர்வு அலுவலக அதிகாரிகள் 79 பேர் பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் 128 பேர் தேர்வறை கண்காணிப்பாளர்கள் 1280 உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டு தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தேர்வுகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்றனர்.
இன்று தேர்வு எழுத வந்த பெரும்பாலான மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் தமிழக அரசு சார்பில் , முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×