search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறவை காவடி ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பறவை காவடி ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    செங்கோட்டையில் முப்புடாதி அம்மன் கோவிலில் பறவை காவடி ஊர்வலம்

    செங்கோட்டையில் முப்புடாதி அம்மன் கோவிலில் பறவை காவடி ஊர்வலம் நடைபெற்றது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 26-ந்தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.

    தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனைகள் மற்றும் கும்மியாட்டம், கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடை நாளன்று காலை குற்றாலத்தில் புனிதநீர் எடுத்துஅம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல், 6 மணிக்கு முளைப்பாரி பூந்தட்டு ஊர்வலம், அதனைதொடர்ந்து செங்கோட்டை பாம்பே ஸ்டோர் விநாயகர் கோவிலில் இருந்து பறவைகாவடி தொடங்கி ஊர்வலம் வந்தது.

    இரவு 8.30 மணிக்கு தீ சட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதி உலா நிகழ்வும் நடந்தது.இதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×