search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாமக்கல் மாவட்டத்தில் காற்று, மழையால் பயிா்கள் சேதம்

    நாமக்கல் மாவட்டத்தில் காற்று, மழையால் பயிா்கள் சேதமானது.
    நாமக்கல்: 

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், வாழை, மா, பப்பாளி போன்றவை பாதிப்படைந்துள்ளன. இவை மட்டுமின்றி இதர தோட்டக்கலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    பயிா்சேத விவரம் குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன. விவசாயிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தோட்டக்கலைத் துறை அலுவலக 9629662329 என்ற  எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டும் விவரங்ளை தெரிவிக்கலாம்.

    வருகிற  12-ம் தேதி மழையால் ஏற்பட்ட பயிா் சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், வருவாய் துறையினா் இணைந்து ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×