என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெயிண்டர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற பெயிண்டர் பலியானார். விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆறுமுகநேரி:

  நாகர்கோவில் அருகே உள்ள மேலக்கலங்குடியைச் சேர்ந்தவர் அஜித்சிங் (வயது35).இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சியாம் (46), ஈசாந்திமங்கலம் மனோசிங் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

  கடந்த 28-ந் தேதி இரவு இவர்கள் 3 பேரும் திருச்செந்தூருக்கு பெயிண்ட் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர்.மனோசிங் மோட்டார் சைக்கிளை ஓட்ட அவர் பின்னால் அஜித்சிங் அமர்ந்திருந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளை சியாம் ஓட்டி வந்தார்.

  இந்த நிலையில் ஆறுமுகநேரி -–அடைக்க–லாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றின் மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

  இதில் அஜித்சிங் தூக்கி வீசப்பட்டார்.அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ மூலம் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அஜித்சிங் பரிதாபமாக இறந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

  விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×