search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    சென்னையில் கடந்த மாதத்தில் பொதுவெளியில் சுற்றிய 557 மாடுகள் பிடிக்கப்பட்டது- உரிமையாளர்களுக்கு ரூ.8 1/2 லட்சம் அபராதம்

    மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன் கூட்டியே அந்தந்த மண்டல நல அலுவலர்களின் அனுமதி பெற வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

    மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் போலீசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 01.04.2020 முதல் 30.04.2022 வரை மொத்தம் 557 மாடுகள் பிடிக்கப்பட்டு உள்ளன. அந்த உரிமையாளர்களுக்கு தலா ரூ.1550 வீதம் ரூ.8 லட்சத்து 63 ஆயிரத்து 360 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும்

    பொது வெளியில் திரியவிடக்கூடாது. மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன் கூட்டியே அந்தந்த மண்டல நல அலுவலர்களின் அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×