என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 2 பேருக்கு வலைவீச்சு-டிராக்டர்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  நெல்லை:

  சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.  அப்போது அங்குள்ள பாஞ்சான்குளம் சாலையில் 2 டிராக்டர்கள் வந்தன. அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

  உடனே அதில் இருந்த டிரைவர்கள் 2 பேரும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் போலீசார் டிராக்டரை சோதனை செய்தனர். அதில் மணல் இருந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

  தொடர்ந்து நடத்திய விசாரணையில் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைபேரி வடக்கு தெருவை சேர்ந்த மாரிசாமி(வயது 28), பெரியூர் கீழ தெருவை சேர்ந்த கருப்பசாமி(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

   இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×