என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தகம் வழங்கிய காட்சி.
  X
  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தகம் வழங்கிய காட்சி.

  புதியம்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு தேர்வு எழுதும் 150 பேருக்கு புத்தகங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதியம்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு தேர்வு எழுதும் 150 பேருக்கு புத்தகங்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
  புதியம்புத்தூர்:

  தமிழகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஏற்பாட்டின் பேரில்,

  ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 இளைஞர்களுக்கும், காவல்துறையில் பணியாற்றிவரும் 50 காவலர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு புதியம்புத்தூர் கனி திருமண மண்டபத்தில் வைத்து, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தகங்களை வழங்கினார்.

  நிகழ்ச்சியில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் தர்மர், சுதர்சன் புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×