என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  44 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.
  X
  44 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

  முதலூர் பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே முதலூர் பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம் அருகே முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளியில் 1978-79-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

  சேகரகுருவானவர் ஏசுவடியான துரைச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தார்.  மாணவர்கள்  ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் வரவேற்றார்.

  இதில் 78-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.  படித்த மாணவர்களில் 46 பேர்கள் தங்களது குடும்பமாக கலந்து கொண்டு கலந்துரையாடினர். தங்களது படித்த காலத்தில் உள்ள குழுவாக எடுத்த படங்களை காட்டி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

  அவர்களுக்குள் செல்போனில்   ‘செல்பி ’ எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ், ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சந்திப்பு அமைப்புக்குழு தலைவர் ஜோன்ஸ், செயலாளர் கென்னடி, பொருளாளர் சாம் அருள்ராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் தலைமையில் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×